சந்திரமுகி 2 படத்தில் மீண்டும் இணையும் "வைகைப்புயல்"
நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்பதற்காக போடப்பட்ட தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதால் தற்போது பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் வைகைப் புயல்.
முதலாவதாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகர்’ என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வடிவேலு அடுத்தடுத்து ஐந்து படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதையும் படிக்க | ஷங்கரின் மகள் அதிதி வெளியிட்ட புதிய புகைப்படங்கள்
இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்திருந்த நிலையில் தற்போது அப்படத்தில் முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை நடிகராக வடிவேலு ஒப்பந்தமாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து செய்த நகைச்சுவைகள் இன்றும் பேசப்பட்டு வருவதால் இந்த பாகத்திலும் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.